www.sivajiganesan.in
WELCOME TO SIVAJIGANESAN.IN
10.09.2017 ஞாயிறு, மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சிபாரடைஸில் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை 100வது நாள் வெற்றி விழா, அனைவரும் வருக...
All Copyrights Reserved@2015
This Site Designed by G.Sundarajan
Send You Feedback - info@sivajiganesan.in
1 2 3 4                                            
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள், நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாள் அக்டோபர் 1 வருவதால், அதற்குள் சென்னை மெரினாவில் சிவாஜி அவர்களின் சிலையை நிறுவிட வேண்டும்  என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் சூழலில், அனைத்து அரசியல்வாதிகளும்  அதைச் சார்ந்தே அறிக்கை விடும் நிலையில்,
சரியான நேரத்தில், சிவாஜி அவர்களின் சிலையை மெரினாவில் நிறுவிட வேண்டும் என கோரிக்கை வைத்து திருநாவுக்கரசர் அவர்களும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து அரசியல்வாதிகளும், அ்ரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை அரசுக்கு வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்போம்.
தளபதி ராம்குமார், இளையதிலகம் பிரபு அவர்களின் நல்ஆசியுடன் நடைபெறும் ஹரீஷ்குமார்-நந்தினி அவர்களின் இல்ல காதணி விழாவிற்கு வாழ்த்த வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறது நமது சிவாஜிகணேசன்.இன். விழாவிற்கு திருச்சியில் நமது அன்பு இதயங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள அட்டகாசமான பேனர்....
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசியுடனும், இளையதிலகம் பிரபு அவர்களின் வாழ்த்துக்களுடனும் நாளை 17.09.2017 அன்று பிறந்தநாள் காணும் எனது அன்பு புதல்வன் எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
வருங்காலத்தில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளையை பொறுப்பேற்று நடத்தி, ஏழைகளுக்கும், படிக்க வசதியில்லாதவர்க்கு உதவி புரிய வேண்டும்.
வருடாவருடம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும்.
என்றும் தலைவர் சிவாஜி அவர்களின் புகழையும் இளையதிலகம் பிரபு அவர்களின் புகழையும் காக்க வேண்டும்.
இது தான் இந்த பிறந்தநாளில் நான் எனது புதல்வனிடம் கேட்டுக் கொண்டது.
தன்னலம் கருதாத, அப்பழுக்கற்ற மக்கள்தலைவரின் இதயங்களே, நீங்களும் வாழ்த்துங்கள்......
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வரும் ஞாயிறு 10.09.2017 அன்று மதுரையில் மாபெரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிவாஜி திருவிழா. ஆம், 44 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவில் மறுவெளியீடு செய்து 100வது நாளைக் கொண்டாடுகிறது நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை. கோடி கணக்கில் செலவழித்து ஒரு வாரம் தாக்கு பிடிக்க முடியாமல் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தியேட்டரை விட்டு ஓடும் புதுப்படங்கள், புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதையாக, சிவாஜி படம் டிஜிட்டலில் ஓடுகிறதே என்று மற்றவர்களின் படத்தையும் டிஜிட்டல் செய்து வெளியிட்டால் ஒரு வாரத்தை பூர்த்தி செய்வதே கடினமாக உள்ளது. மேலும் சில படங்கள் டிஜிட்டல் செய்து ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறது.
ஆனால் நடிகர்திலகத்தின் படமோ 100 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது என்றால் இது சரித்திர நாயகனின் சரித்திர சாதனை தானே.
அன்பிற்குரியவர்களே,
ராஜபார்ட் ரங்கதுரையின் 100வது நாள் விழா, மாபெரும் மாநாடாக மாறும் என்பதில் ஐயமில்லை. அனைத்து மாவட்டங்களில் இருந்தும், இப்போதே தயாராகி விட்டனர்.
வாருங்கள் வரவேற்கிறது மதுரை உங்களை.
 
அன்பு இதயங்களே, 8.09.2017 வெள்ளி முதல் உலகமெங்கும் வெளிவருகிறது, முதன் முதலாக வின் ஸ்டார் விக்ரம் பிரபு தயாரித்து நடித்த நெருப்புடா திரைப்படம். நெருப்புடா திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள், இளையதிலகம் பிரபு அவர்கள் கலையுலகில் கோலோச்சியது போல் நமது விக்ரம் பிரபு அவர்களும் வரவேண்டும். அன்னை இல்லம் தான் கலையுலகை ஆள வேண்டும்.
எனவே, அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, நாம் அனைவரும் குடும்பத்துடன் நெருப்புடா திரைப்படத்தினை திரையரங்கில் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், நமது நண்பர்கள், உறவினர்கள், நமது வாரிசுகளின் நண்பர்கள் என அனைவரிடத்திலும் படத்தை தியேட்டரில் பார்க்க செய்ய வேண்டும்.
நெருப்புடா திரைப்படத்திற்கு மதுரையில் ஒட்டப்படும் சுவரொட்டி உங்கள் பார்வைக்கு....
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கடற்கரைசாலையில் இருந்து நடிகர்திலகத்தின் சிலையை அகற்றியதற்கு கண்டனங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
இன்று இயக்குநர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள்,
சிவாஜி அவர்கள் உலகஅளவில் புகழ்பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். சிவாஜி அவர்கள் மும்பையிலோ அல்லது வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பார். இந்திய அரசின் அனைத்து விருதுகளையும் பெற்றிருப்பார். இந்திய அளவில் சிவாஜி அவர்கள் தமிழன் என்ற காரணத்தினால் தான் ஒதுக்கப்பட்டார். என்று கூறினார். மேலும், கடற்கரைசாலையில் சிவாஜி அவர்களின் சிலையை நிறுவ வேண்டும். அதற்காக நாங்கள் போராடவும் தயார் என்றார். 
அபிராமி ராமநாதன் அவர்கள் பேசும் போது நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மத்திய அரசின் பத்மவிபூசன் விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன்னார் அவர்கள், கடற்கரைசாலையில் இருந்த சிவாஜி சிலையை தமிழக அரசு அகற்றியது மாபெரும் தவறு. சிவாஜி சிலை தனிநபர்களால் வைக்கப்பட்டது கிடையாது. தமிழகஅரசின் சார்பில் வைக்கப்பட்டது, எனவே, தமிழகஅரசு சட்டசபையைக் கூட்டி சிவாஜி சிலையை அகற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகஅரசே,
இன்னும் பல முனைகளி்ல் இருந்தும் கண்டனங்கள் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செய்த தவறுக்கு பிராயசித்தமாக உடனே தற்போது மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையை காமராஜர் சிலைக்கும் காந்தி சிலைக்கும் இடையில் வைத்து விடுங்கள்.
அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
 சென்னையில் 12.08.2017 சனிக்கிழமை  திரைத்துறையினர் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நமது தலைவர் சிவாஜி அவர்களின் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நமது நடிகர்திலகம் அவர்களின் கலைத்தொண்டு, மற்றும் சாதனைகள் பற்றி அனைவரும் விரிவாக பேசினார்கள். 

உடனடி நடவடிக்கை இல்லாமல் காலம் தாழ்ந்து தங்களது கண்டணத்தை தெரிவித்தாலும் திரைத்துறையினருக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல் நடிகர் சங்கமும் தனது கண்டனத்தையும், மீண்டும் மெரினாவில் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் என்று நம்புகிறேன்.
இருந்தாலும், சிலை அகற்றிய உடனேயே, நடிகர்சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதுவரை தனது கண்டனத்தை தெரிவிக்காத நடிகர்சங்கத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். 
sivajiganesan
 
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, மற்றும் நண்பர்களே,
நமது தமிழ்நாட்டில் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் கலையுலக பிரவேசமான 1952ல் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர்கள் பெயர் பட்டியல் இதோ,
1.குமாரசாமி ராஜா  2.ராஜாஜி  3.காமராஜ்  4.பக்தவச்சலம்  5.அண்ணாதுரை  6.நெடுஞ்செழியன்  7.கருணாநிதி  8.எம்ஜிஆர்  9.ஜானகி எம்ஜிஆர் 10.ஜெயலலிதா  11.பன்னீர்செல்வம்  12.எடப்பாடி பழனிசாமி
இதில் எதிர்பாராத வகையில் நெடுஞ்செழியன் 2 முறையும், பன்னீர் செல்வம் அவர்கள் 3 முறையும் முதலமைச்சராக இருந்துள்ளனர்.
அதாவது,
தமிழ்நாட்டில் 1952ல் இருந்து 2017 வரை 62 வருடமாக 12 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். இனி இது தொடரும் நாளை சசிகலா அல்லது தினகரன் கூட முதலமைச்சராகலாம்.
முதலமைச்சர் பதவி என்பது இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரை மிஞ்சி அடுத்தவர் என தாெடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
முதலமைச்சர் பதவி என்பது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது.
ஆனால்,
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தான் கால்பதித்த 1952 முதல், தான் விண்ணுலகம் சென்ற 2001வரை 49 வருடமாக கலையுலகில் அவரை அசைச்க ஒருவரும் கிடையாது. சரி போகட்டும் 2001க்கு பிறகாவது அவருடைய சாதனையை முறியடிக்க அல்லது அவரை மிஞ்ச யாராவது வந்தார்களா என்றால் அதுவும் இல்லை. 2001க்கு பிறகும் தற்போது 2017 வரை இன்றும் கலையுகில் சிவாஜி ஒருவரே ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
அன்பானவர்களே, 2017 மட்டுமல்ல 3000மாவது ஆண்டு வந்தாலும் திரையுலகில் சிவாஜி என்ற ஒருவரை விஞ்ச எவரும் முடியாது.
 
சென்னை கடற்கரை சாலையில் உள்ள நமது தலைவர் சிவாஜி அவர்களின் சிலை அகற்றப்பட்டது குறித்து நமது தளபதி ராம்குமார் அவர்களும், இளையதிலகம் பிரபு அவர்களும் கூறுகையில், மெரினா கடற்கரையில் தலைவர்கள், அறிஞர்கள், புலவர்கள் சிலைகள், கண்ணகி மற்றும் உழைப்பாளர் சிலை உள்ளன.
எனவே நடிப்புக்கு பெருமை சேர்த்த தமிழர் சிவாஜி அவர்களுக்கு கடற்கரையில் சிலை அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொண்டராக இருந்தவர் சிவாஜி. எனவே, தேசத்தந்தை காந்தி, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு இடையே புதிய சிவாஜி சிலை அமைக்கும் முயற்சியை சிவாஜி ரசிகர்மன்றம் மூலம் நாங்கள் செய்வோம். இதற்கான அனுமதியை சட்டபூர்வமாக அரசிடம் பெற  வற்புறுத்துவோம். எங்கள் குடும்பத்தினரும் இதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளார்கள்.
நடிகர்திலகத்தின் இதயங்களின் மனதில் பாலைவார்த்த தளபதி ராம்குமார் அவர்களுக்கும், இளையதிலகம் பிரபு அவர்களுக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.
 
03.08.2017

3.8.2017 கருப்பு நாள்

அன்பு இதயங்களே,
கண்களில் என்னை அறியாமல் கண்ணீர்.....
எழுத்துக்களை அடிக்க கைகளில் நடுக்கம்....
மனதில் ஒரு கலக்கம்....

தலைவா,
சென்னை வரும் போது கடற்கரைசாலையில்
உள்ள உங்கள் சிலையை பார்க்கும் போது
உங்களை உயிருடன் பார்த்த திருப்தியில்
ஊர் திரும்புவேனே.....

இனி.....

தமிழே,
உன்னை உச்சரிக்கக் கற்றுக் கொடுத்த ஆசானுக்கு
நீ கொடுத்த பரிசு....

சிலை வழக்கு போட்டவர் இல்லை,
சிலை இடையூறு என்று சொன்னவர்  இல்லை


சிலை எடுத்த கூட்டமே உங்களுக்கு
காலம் பதில் சொல்லும்.
31.07.2017
அன்பு இதயங்களே,
சினிமா 720 யூ டியூப் சேனலில் தலைவருடன் நான் நிகழ்ச்சியில் என்னுடைய பேட்டி வெளி வந்துள்ளது.
எனக்கு தெரிந்த அளவிலும், நான் நேசித்த அளவிலும், பகிர்ந்துள்ளேன். தவறேதும் இருப்பின் மன்னித்து விடுங்கள்.
கடைக்கோடி ரசிகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நான் வணங்கும் தெய்வம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கும், சினமா 720 சேனலுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
18.06.2017
உத்தம தலைவன் சிவாஜியை தேர்ந்தெடுக்காத தமிழகமே...
இன்று உன் நிலை கண்டு வேதனைப்படுகிறோம்.

விவசாய நலன் காக்க நமது மக்கள்தலைவர் வெளியிட்ட
தேர்தல் அறிக்கை பாருங்கள்.......

தமிழகம் வளர்ச்சியுற
ஏழ்மை இல்லாத
தமிழகத்தை உருவாக்க
மக்கள்தலைவரின்
விஞ்ஞானபூர்வமான
தேர்தல் அறிக்கையில்
அடுத்தது
தொழில்வளர்ச்சி பற்றி...
விரைவில்....
01.06.2017
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, ஊடகங்களும் சரி, மக்களும் சரி இப்போது தான் நமது தலைவர் சிவாஜி அவர்கள் தமிழக மக்களின் மீதும், தமிழ்நாட்டின் வளர்ச்சி மீதும் அக்கறைக் கொண்டிருந்தார் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர்.
ஒரு தமிழனை, அரசியலில் உண்மையையும், நேர்மையையும் கொண்டு வர முயற்சி செய்தவருக்கு பொறுப்பை தராமல் கண்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்ததின் விளைவை இன்று தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த செய்தியை படியுஙகள்
நாம் எப்படிப்பட்டவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்தோம் என்று....
பகிரங்கமாக ஆண்டவர்களின் சரித்திரத்தை போட்டுடைத்து, மக்கள்தலைவரையும் பெருந்தலைவரையும் தோற்கடித்ததன் விளைவு தான் இது என மக்களை உணரச் செய்யும் வகையில் இதை எழுதி அனுப்பிய மதுரை மல்லிகை மன்னன் அவர்களுக்கும், அதை வெளியிட்ட தினமலருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பில் நன்றி.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நமது நடிகர்திலகத்தின் வயது ஒத்தவர்கள் கூட அறிந்திருக்க முடியாத பல அரிய செய்திகளை உள்ளடக்கி மாபெரும் பொக்கிசமாக, நடிகர்திலகத்தின் முழுமையான ஆசிபெற்ற எழுத்துத் துறையில் தனக்கென  ஒரு இடத்தை பிடித்திருக்கும் நமது நடிகர்திலகத்தின் ஆயுட்கால ரசிகர் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா  அவர்கள் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ள 
கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை என்ற புத்தகத்தில் வெளியாகியுள்ளது.
நமது நடிகர்திலகத்தின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருந்தாலும், முழுமையாக அலசி ஆராய்ந்திருக்கும் புத்தகமாக இந்தப் புத்தகம் உள்ளது.
விலை 400 ரூபாயாக இருந்தாலும், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளைப் பார்க்கும் போது 4 இலட்சம் பெறும் என்பது படித்துப் பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
இந்தப் புத்தகம் நமது நடிகர்திலகம் புகழ் காப்பதில் ஒரு வைரக்கல்லாக விளங்கும் என்பதில் ஜயமில்லை.
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு
பந்தளம் பதிப்பகம்
9962118144   9566274503  8680979875
 
 

யார் வள்ளல்? ஏமாற்றியவரா? ஏமாந்தவரா?....

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்காமல் ஏமாற்றிய எம்.ஜி.ஆர்..!

அன்புள்ள மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே, நாம் தலைவரின் ரசிகர் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்வோம். உலகத்தில் எந்த ஒரு தலைவனும் இப்படி வாழ்ந்திருப்பார்களா என்பது சந்தேகம் என்பது மட்டுமல்ல இருக்கவே முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
நடிகர்சங்க கடனை அடைக்க நம் தலைவர் பட்ட கஷ்டங்கள் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கோ அல்லது நடிகர்களுக்கோ தெரிந்திருக்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கத் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை, இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
நடிகர் சங்கத்திற்கு இடம் வாங்க எம்.ஜி.ஆர் அவர்கள் பணம் கொடுத்தார் என்று தோற்றுப் போன சரத்குமார் அணியினர் பேசினார்கள், மேலும் சிவாஜி அவர்களுக்கும் நடிகர்சங்கத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தான் அவர்கள் அணியின் பேச்சு இருந்தது.
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்று நம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் பாடியது போல் இன்று நம் கவலைகள் ஒவ்வொன்றாக தீர்த்து வைக்கிறார் நம் ஆண்டவனாக வழிபடும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
நடிகர்சங்க கடனை அடைக்க சிவாஜி அவர்கள் கலை நிகழ்ச்சி நடத்திக் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் கொடுத்த ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபாயில் ஐந்து லட்ச ரூபாயை மட்டும்  கொடுத்து விட்டு மீதியை தராமல விட்டு விட்டார்....
முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

 

மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடிகர்சங்கத்தின் தலைவராக இருந்த காலமே பொற்காலம்.  

 
அனைவரும் வாங்கி படியுங்கள் இதயங்களே....
  காலம் கடந்து வெளிவரும் உண்மை  
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 
நமது மக்கள்தலைவரின் நடிப்புக்கு இறுதி வரை மத்திய அரசு சிறந்த நடிகருக்கான தேசிய விருதான "பாரத்" பட்டம் வழங்கவில்லை என்பது நமக்கு மட்டுமல்ல கலையுலகைச் சேர்ந்த நடிக்கத் தெரிந்தவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வருத்தமாக இருந்தது. மக்கள்தலைவரின் பால் அன்பு கொண்டவர்கள் சிவாஜி அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பட்டம் அரசியல் காரணங்களுக்காக எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை.
தர்மத்தின் வாழ்வு தனை கூது கவ்வும்- 
இறுதியில் தர்மம் வெல்லும்.   என்ற தத்துவத்தின் படி
இன்று உண்மை வெளிவந்திருக்கிறது. ஆம் அன்பு இதயங்களே, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், வேறொரு நடிகருக்கு (அதாவது சிவாஜி அவர்களுக்கு) கிடைக்க வேண்டிய விருது அரசியல் நிர்ப்பந்தத்தின் போில் தனக்கு வழங்கப்பட்டதாகவும் எனவே சிறந்த நடிகருக்கான விருதை திருப்பி தருவதாக அன்றைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு.ஐ.கே.குஜ்ரால் அவர்களுக்கு 21.3.1973 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
நடிப்புக்கென்ற பிறந்த மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு கிடைக்க வேண்டடிய நியாயமான விருது அரசியல் காரணங்களால் எப்படி மாறியுள்ளது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர்  கலைஞர்,  திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து,  எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை” மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 


 
  • அன்புள்ள மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே, நமது அன்பு தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பாட திரு.ராகவேந்திரா(நடிகர்திலகம்.காம்), சகோதரி கிரிஜா(நடிகர்திலகம் சிவாஜி.காம், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா (தலைவன் சிவாஜி.காம்). திரு.சந்திரசேகரன்(சிவாஜி பேரவை.காம்) இவர்களின்வழியில் சிவாஜிகணேசன்.இன் என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கபட்டுள்ளது.
  • இந்த வலைதளத்தில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் அனைத்து செய்திகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பதிவிடப்படும். எந்த அமைப்பினராக இருந்தாலும் தங்கள் பகுதியில் நடைபெறும் தலைவர் சிவாஜி அவர்களின் விழா, தலைவரின் அன்பு இதயங்களின் பிறந்தநாள் மற்றும் இல்ல விழா எந்த நிகழ்ச்சியானாலும் அதன் புகைப்படத்தை info@sivajiganesan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • உலகமெங்கும் உள்ளவர்கள் தாங்கள் நடத்தும் மக்கள் தலைவரின் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.


அன்புடன்
www.sivajiganesan.in