www.sivajiganesan.in
WELCOME TO SIVAJIGANESAN.IN
சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு . பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி.
All Copyrights Reserved@2015
This Site Designed by G.Sundarajan
Send You Feedback - info@sivajiganesan.in
1 2 3 4                                            
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் மக்கள்தலைவர் சிவாஜி மற்றும் தளபதி ராம்குமார், இளையதிலகம் பிரபுவின்
அன்புக்குப் பாத்திரமானவருமான் திரு.நா.ரமேஷ்பாபு அவர்களின் அத்தையார் திரு.மாரம்மாள் அவர்கள் 26.10.2015 அன்று மாலை 5 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
திரு.ரமேஷ்பாபு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை  நிர்வாகிகள், கோடிக்கணக்கான மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் மற்றும் சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். திரு.ரமேஷ்பாபு அவர்களின் அலைபேசி எண் - 9994352200
மதுரையில் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் அகிலஇந்திய சிவாஜி மன்ற இணை செயலாளர் திரு.முருகவிலாஸ் நாகராஜன், திருச்சியில் இருந்து அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் தலைவர் திருச்சி.எம்.சீனிவாசன், சென்னையில் இருந்து அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவரும், எழுத்தாளருமான திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, மதுரை மாவட்ட பிரபு தலைமை மன்ற நிர்வாகிகள் பி.ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.பி.பக்ரூதீன், பிரபுவெங்கடேஷ், எம்.போஸ், மதுரை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஜோதிபாஸ்கரன், அ.இ.சி.ம.செயற்குழு உறுப்பினர் பேட்டை மோகன், மற்றும் பழனிபாபு, வக்கீல் எஸ்.கார்த்திகேயன், பண்டாபீஸ் நாகராஜ், பச்சைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எதிலுமே சாதனை படைக்கும் நமது மக்கள்தலைவர் மருத்து முகாமிலும் தமது சாதனையை நிகழ்த்தி விட்டார். ஆம், அன்பு இதயங்களே,
இதுவரை  நடந்து அனைத்து முகாமிலும் அதிகபட்சம் 150 நபர்களே வந்து  சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் நமது தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் 225 நபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.....
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, தமிழக அரசியல் வார இதழில் 25.10.15 ஞாயிறு முதல் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நாடகம், சினிமா, அரசியல் பற்றி செல்லுாய்ட் சோழன் என்ற தலைப்பில் நமது தலைவர் சிவாஜி அவர்களின்பால்  தீராத காதல் கொண்ட வளர்ந்து வரும் எழுத்தாளர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள்  வாரா வாரம் தொடர்ந்து எழுத உள்ளார். 
மக்கள்தலைவர் சிவாஜியின் பால் அன்பு கொண்ட ஒவ்வொருவரும் வாங்கி தமிழக அரசியல் வார இதழின் விற்பனையை அதிகரிக்கச் செய்யவேண்டுமாய் அன்புடன் சிவாஜிகணேசன்.இன் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு செய்யும் பட்டசத்தில் நாளை மற்ற இதழ்களிலும் நமது தலைவரை பற்றி பல எழுத்தாளர்கள் எழுத முன்வருவர்.
நமது தலைவரைப் பற்றி தெரியாத சில விசயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவரும். எனவே ஒவ்வொருவரும் வாரா  வாரம் தமிழக அரசியல் இதழை வாங்கி தலைவரின் புகழ்  காக்கத் தயாராகுங்கள் அன்பு இதயங்களே.
தொடர் எழுதும் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசியுடன் மென்மேலும் சிறக்க சிவாஜிகணேசன்.இன் வாழ்த்துகிறது.
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் இலவச பல் மருத்துவ முகாமிற்கு நமது மக்கள்தலைவரின் சிவாஜி அவர்களின் தளபதி எங்களின் அன்பு அண்ணன் திரு.ராம்குமார் கணேசன் அவர்கள் தனது வாழ்த்தினை மின்னஞ்சல் மூலம் தெரிவித்து உள்ளார்.
அண்ணன் தளபதி ராம்குமார் அவர்களுக்கு எங்களது  மனமார்ந்த நன்றி 
இவண்-- நா.ரமேஷ்பாபு   கா.சுந்தராஜன் 
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,மதுரை.
1970ல், தெலுங்கு பட நடிகர், நடிகைகள் ஒரு ஞாயிற்றுகிழமை சுற்றுலா போக தீர்மானித்தனர். மெட்ராஸ்க்கு அருகில் உள்ள சிவாஜி கார்டனில் விளையாட்டு போட்டிகள் வைத்து அந்த ஞாயிற்றுகிழமையை கழித்தனர். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் அவர்களுக்கு அந்த கார்டனுக்கு செல்ல அனுமதி அளித்ததோடு அங்கு நடந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு ஏற்றார்.. முதலில் கபடி மேட்ச், MUSICAL CHAIR விளையாட்டு, MOVING ICE BABY GAME போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றது.. முகநுாலில் நண்பர் பதிவிட்ட காணக்கிடைக்காத படங்கள் உங்கள் பார்வைக்கு...
மக்கள்தலைவர் சிவாஜி, சாவித்திரி, பாதாள பைரவி ரிலேங்கி, காமெடியன் பத்மனாபம், ஜமுனா, வாணிஸ்ரீ, ரமாபிரபா, ஜெயந்தி, பத்மா மற்றும் பலர்
ICE BABY GAME ல் தோற்றதால் அஞ்சலி தேவி 10 தோப்புகரணம் போடுகிறார்..
கபடி விளையாட்டில் சாவித்திரி அணி.. இதுதான் வெற்றி பெற்ற அணியும் கூட... மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் சக நடிகைகளுடன், இப்படி ஒரு நடிகரை இந்த உலகம் இதுவரைக் கண்ணடிருக்குமா?
நடிகையர் திலகம் சாவித்திரி, ஜமுனா, ரமாபிரபா ஆகியோர்.
சமீபத்தில் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் சிறுகதைகள் என்ற நுால் திமுக தலைவர் திரு.மு.கருணாநதி அவர்கள் வெளியிட உலகநாயகன் திரு.கமல் அவர்கள் பெற்றுக் கொண்டார். விழாவில் திரு.வைரமுத்து அவர்கள் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது கலைஞரின் விரல் சிவாஜியின் குரல் என்று பேசினார்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் அன்பு இதயம் திரு.சிவாஜி ரவி அவர்கள் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யச் சொல்லி நமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்துள்ள சுவரொட்டியின் புகைப்படங்கள்....
மக்கள் தலைவரின் அனைத்து அன்பு இதயங்கள் அனைவருக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள். தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை மறைக்க முயன்ற சரத்குமார் அவர்களின் முரண்பட்ட பேட்டியைப் பாருங்கள். 19.10.15 அன்று இரவு 12 மணிக்கு பேட்டி அளித்த போது பாண்டவர் அணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்பினால் சத்யம் சினிமாஸிடம் நான் பேசத் தயாராக இருக்கிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் 20.10.15 அன்று நான் ஏற்கனவே அதாவது 29.9.2015 அன்றே ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டேன் என்று பேட்டி அளித்த சரத்குமார் அவர்களே, பிறகு எதற்காக 19.10.15 அன்று பேட்டி அளித்த போது பாண்டவர் அணியிடம் ஒப்பநத்தத்தின் நன்மையைச் சொல்வேன், அதன்பிறகும் அவர்கள் சொன்னால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி செய்வேன் என்று சொன்னதன் காரணம் என்ன?        
தாங்கள் நடிகர்சங்கம் தேர்தலில் பரப்புரை செய்யும் போத  நடிகர் சங்கத்திற்கு பாடுபட்டவர்களின் பெயர்களைச் சொன்ன போது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத பெயர்களைச் சொன்ன  நீங்கள், தங்களால் இடித்துத் தரைமட்டமாக்கபட்ட நடிகர்சங்க கட்டிடம் ஊழலறியா உத்தமன் எங்கள் சிவாஜி அவர்கள் தலைவராக இருந்தபோது கட்டியது என்பதைச் சொல்ல மறந்ததேன்?
உங்கள் அருகில் இருந்தவர்கள் பலர் சிவாஜி அவர்களைப் பற்றி தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனமாக இருந்தார்களே, அதுபோல் இறைவனும் இருப்பார் என்று நினைத்தீர்களா?
இன்னும் எத்தனை போ் வந்தாலும் எங்கள் தலைவர் சிவாஜி அவர்களின் புகழையோ பெயரையோ மறைக்க முடியாது என்பதை இனியாவது அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
20.10.2015 தினமலர் நாளிதழில் சரத்குமார் அணியின் தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு நடிகர்சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்காதது ஒரு காரணம் என்று எழுதியுள்ளனர். இதற்கு பிறகாவது மக்கள்தலைவர் சிவாஜி சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் மதுரை மகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் பள்ளிக்கு அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு முகாம் பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள  வசதியாக 3000 நோட்டீஸ் அடித்து அனைவருக்கும் வநியோகம்  செய்யப்பட்டு வருகிறது. அந்த நோட்டீஸ் உங்கள் பார்வைக்கு.....  அனைவரும் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு....
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 16.10.2015 வெள்ளி முதல் இளையதிலகம் பிரபு அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிக் காவியம் பாஞ்சாலங்குறிச்சி திரையிடப்பட்டுள்ளது. தியேட்டரில் தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில்வைக்கபட்டுள்ள வரவேற்பு பேனர்...
விரைவில்... தமிழக அரசியல் வார இதழில் வெளிவரப் போகும் மக்கள்தலைவரி  சிவாஜி அவர்களின் தொடர் குறித்து இந்த வார இதழில் வெளிவந்துள்ள விளம்பரம். ஏற்கனெவே சென்ற இதழில் வெளிவந்த விளம்பரம் நமது இணையதளத்தில் உள்ளது.

 
  • அன்புள்ள மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே, நமது அன்பு தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பாட திரு.ராகவேந்திரா(நடிகர்திலகம்.காம்), சகோதரி கிரிஜா(நடிகர்திலகம் சிவாஜி.காம், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா (தலைவன் சிவாஜி.காம்). திரு.சந்திரசேகரன்(சிவாஜி பேரவை.காம்) இவர்களின்வழியில் சிவாஜிகணேசன்.இன் என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கபட்டுள்ளது.
  • இந்த வலைதளத்தில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் அனைத்து செய்திகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பதிவிடப்படும். எந்த அமைப்பினராக இருந்தாலும் தங்கள் பகுதியில் நடைபெறும் தலைவர் சிவாஜி அவர்களின் விழா, தலைவரின் அன்பு இதயங்களின் பிறந்தநாள் மற்றும் இல்ல விழா எந்த நிகழ்ச்சியானாலும் அதன் புகைப்படத்தை info@sivajiganesan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • உலகமெங்கும் உள்ளவர்கள் தாங்கள் நடத்தும் மக்கள் தலைவரின் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.


அன்புடன்
www.sivajiganesan.in