www.sivajiganesan.in
WELCOME TO SIVAJIGANESAN.IN
சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு-- சிவாஜி சிலை : செயலாளர் ஆஜராக உத்தரவு
All Copyrights Reserved@2015
This Site Designed by G.Sundarajan
Send Your Feedback - info@sivajiganesan.in
1 2 3 4                                            
அன்னை இல்லத்தின் சார்பில் ஆச்சி மனோரமாவுக்கு தளபதி ராம்குமார், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, சாந்தி அக்கா, தேன்மொழி  அக்கா, பேபி அண்ணி, புனிதவதி அண்ணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இளையதிலகம் பிரபு அவர்கள் துயரம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் உடன்பிறவா சகோதரி மனோரமா அவர்களின் பிரிவைத் தாங்கமுடியாமல் தலைவரின் குடும்பமே அழுதது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. சில படங்கள் உங்கள் பார்வைக்கு...
ஆச்சி மனோரமா அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது மக்கள்தலைவர் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் எப்படி கலைத்துறையில் சிறந்து விளங்கினாரோ அதே போல் திருமதி மனோரமா அவர்கள் பெண் நடிகர்திலகம் என்று கூறும் வண்ணம் புகழ் பெற்றவர் என்று நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை நினைவுகூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி ஆச்சி மனோரமா அவர்களுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்திய போது அருகில் நமது இளையதிலகம்  பிரபு மற்றும் வின் ஸ்டார் விக்ரம் பிரபு ஆகியோர் அருகில் இருந்தனர்.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் உடன்பிறவா சகோதரியும் கலையுலகின் காவியத்தலைவி திரு.மனோரமா ஆச்சி அவர்கள் இன்று 11.10.2015 அன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 78. தனது சிறு வயது முதலே நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் நடிக்கத் தொடங்கியவர். காமெடிக் கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கிய அவர் குணசித்திர வேடங்களில் மட்டுமல்லாத, எந்த வேடமானாலும் வெளுத்துக் கட்டுவார். ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்தவர்  என்ற பெருமையும் பெற்றவர்.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை அண்ணன் என்று வாய் நிறைய அழைப்பார். சிவாஜி என்றால் அவருக்கு அவ்வளவு பாசம் என்பது தமிழகத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கே தெரியும். அதனால் தான் நமது தலைவர் பிறந்த மாதமான அதே அக்டோபர் மாதத்தில் மறைந்து விட்டார்.  மேலும் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மண்ணைவிட்டு மறைந்த போது ஒரு சகோதரி என்ற முறையில் என்ன முறை செய்ய வேண்டுமோ அதைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாசமலரில் வரும் இறுதிக் காட்சியில் அண்ணன் இறந்தவுடன் தங்கையும் இறந்து, விண்ணிலிருந்து அண்ணனும் தங்கையும் தனது வாரிசுகளை வாழ்த்துவது போல் காட்சி வரும். 
அதே போல் தங்கை மனோரமா அண்ணன் சிவாஜியைக் காண சென்று விட்டார். இருவரும்  விண்ணிலிருந்து அனைவரையும் வாழ்த்தட்டும்.
நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுடன் எமனுக்கு எமன் திரைப்படத்தில் திருமதி.ஆச்சி மனோரமா அவர்கள்....
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களும் ஆச்சி மனோரமா அவர்களும் இணைந்து மாபெரும் காவியமான தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் அற்புதமான ஒரு காட்சி உங்கள் பார்வைக்கு....
1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமாவின் அசத்தலான காணொளி உங்கள் பார்வைக்கு....
மதுரையை கலக்கிய உத்தமன் சிவாஜி. முழுச் செய்தி மற்றும் புகைப்படங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சியைச் சேர்ந்த திரு.பொன் ரவிச்சந்திரன் என்ற ரசிகர் நமது மக்கள்தலைவர் அவர்களும் உண்மையான கட்டபொம்மனும் உரையாடி இருந்தால் எப்படி இருக்கும் என்பதனை தனது கற்பனைத்திறனை பயன்படுத்தி நீயா நானா என்ற தலைப்பில் எழுதி நமது இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு....
ஒரு ஜீப்புல சிவாஜிய ஏத்தி ஊர்வலமா அழைச்சிட்டு வந்தத பாத்தப்ப.....  ஒரு மகாராசாவ பாா்க்கிற மாதிரி இருந்திச்சு. திரு.கங்கை அமரன் அவர்கள் நக்கீரன் இதழில் இவ்வாறு கட்டுரை எழுதியுள்ளார். முழுக் கட்டுரையும் கீழே....
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாள் சிறப்புப் பக்கம் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
 
 
மக்கள்தலைவரின் பாசமிகு இதயம் திரு.ஆதவன் ரவி அவர்கள் தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அருமையான கவிதை எழுதியுள்ளார். கவிதையை சுவாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87 வது பிறந்தநாள் தமிழகமெங்கும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகமெங்கும் உள்ள சிவாஜி ரசிகர்கள் சென்னை அன்னை இல்லத்தில் குவிந்தனர். செவாலியே சிவாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை  கடற்கரை சாலையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தளபதி ராம்குமார், இளையதிலகம் பிரபு, வின்ஸ்டார் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ராம்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும்  அன்னை இல்லத்திற்கு வருகை  தந்த அனைத்து ரசிகர்களும் தளபதி ராம்குமார் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
 
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலைக்கு, காலை 9 மணியளவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே. சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, உலக முதியோர் தினத்தையும், நடிகர்திலகம் சிவாஜி 88வது பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் அமைந்துள்ள, அன்னை இல்லம், முதியோர் காப்பகத்தில், இன்று (01-10-2015) காலை 8 மணிக்கு இனிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K .சந்திரசேகரன் கலந்துகொண்டு சிற்றுண்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மாநில நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, V .சீனிவாசன், திரு.M துரைராஜ், ராமஜெயம், சிவாஜி சண்முகம், மின்னல் ஜெயகர், கர்நாடக மாநில அமைப்பாளர் பாபு, மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், குபேரன், குறிஞ்சி பாலாஜி, அம்பத்தூர் வெங்கடேசன், திருச்சி ராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் திருவுருவச் சிலைக்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அகில இந்திய துணைத்தலைவர் கா.சுந்தராஜன் அவர்கள் மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.மேலும் மதுரையைக் கலக்கிய மக்கள்தலைவர் பிறந்தநாள் புகைப்படங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்.
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள சிவாஜி சிலைக்கு ஒரு பெண்மணி கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்தார். மேலும் தனது கையில் தலைவர் சிவாஜி அவர்களின் பச்சைக்குத்தி  உள்ளதாகவும் அதைப் பாா்க்குமாறும் கூறினார். இவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்  சிலைக்கு பிறந்தநாளன்றும், நினைவுநாளன்றும் வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் இந்த இருநாளும் சிவாஜி சிலைக்கு வரவில்லையென்றால் அன்று நான் இப்பூவுலகில் இல்லை என்று அர்த்தம் எனக் கூறி கண்கலங்க வைத்துவிட்டார். அவருக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து சிவாஜி ரசிகர்களின் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன்  சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் அவர் நீடூழி வாழ நமது மனிததெய்வம் சிவாஜி அவர்களை வேண்டுகிறேன்.
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவரின் அன்பு இதயங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சுவரொட்டி மற்றும் பேனர்கள். தலைவருக்கு போஸ்டர் மற்றும் பேனர் வைப்பதினால் இவர்களுக்கு எம்.எல்.ஏ பதவியோ அல்லது அமைச்சர் பதவியோ கிடைக்கப்போவதில்லை மேலும் அரசியல் கட்சிகள் போல் தலைவர் பெயரைச் சொல்லி வசூல் செய்வதுமில்லை, தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தலைவர் புகழ் காக்கும் இதயங்களுக்கு சிவாஜிகணசன்.இன் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள். காசை எதிர்பார்க்காமல் தலைவர் புகழ்காக்கும் இப்படிப்பட்ட தொண்டர்கள் தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை இருக்கவும் முடியாது. நமது இணையதள மின்னஞ்சலுக்கு வந்த மற்றும் முகநுாலில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு...மேலும் படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
 
உத்தமன் சிவாஜி கொண்டாட்டம்  மதுரையில் ஆரம்பம். மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரலில் 02.10.2015 வெள்ளியன்று வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒட்டபடவுள்ள சுவரொட்டி. 
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கூடல்மாநகர் மதுரையில் வசூல்சக்கரவர்த்தி நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக அக்டோபர் 2 முதல் மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது. அனைவரும் வருக - மக்கள்தலைவரின் ஆசி பெறுக.உத்தமன் திரைப்படத்திற்கான போட்டோ கார்டு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அனைத்தையும் காண இங்கே கிளிக் செய்யவும்.
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வெளியாகும் உத்தமன் திரைப்படத்திற்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் வைக்கபட்டுள்ள பேனர் மற்றும் சுவரொட்டி....
 
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசிபெற்றவரும்,அகிலஇந்திய  தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் செயல்தலைவரும், எழுத்துத்துறையில் புகழ்பெற்று வரும் எங்கள் அன்பு நண்பருமான கவிஞர் நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் எழுதிய சாவித்திரி கலைகளில் ஓவியம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முதல் பிரதியை திருமதி.லெட்சுமி அவர்கள் வெளியிட திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்று வீடியோ தொகுப்பு விரைவில் நமது இணையதளத்தில் காணலாம். முன்னோட்டமாக  சில புகைப்படங்கள்....
வ்ரவேற்பு பேனர்கள் மக்கள்தலைவருடன் சாவித்திரி அவர்கள்
குத்துவிளக்கு ஏற்றும் திருமதி.லெட்சுமி அவர்கள், திருமதி ஒய்.ஜி. அவர்கள், திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள், திருமதி விஜய சாமுண்டீஸ்வரி அவர்கள், திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுடன் மதுரை கா.சுந்தராஜன் மற்றும் மதுரை நா.ரமேஷ்பாபு உடன் உள்ளனர். சாவித்தரி அவர்களின் நுாலை வெளியிட்டபோது நுால் ஆசிரியர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா, திரு.வசனகர்த்தா ஆரூர்தாஸ், திரு.ராஜேஷ் அவர்கள், திருமதி.லெட்சுமி அவர்கள்,  திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள், திருமதி விஜய சாமுண்டீஸ்வரி அவர்கள் மற்றும் அவர் கணவர் திரு.கோவிந்தராஜுலு அவர்கள், திருமதி ஜெயந்தி கண்ணப்பன் அவர்களுடன் மதுரை கா.சுந்தராஜன் மற்றும் மதுரை நா.ரமேஷ்பாபு உடன் உள்ளனர்.
 
மக்கள்தலைவர் சிவாஜி நல்ஆசியுடன் இளையதளபதி விஜயின் புலி வெற்றி பெற வாழ்த்துகிறேன். நடிகர்திலகம் சிவாஜி பேரைச் சொன்னாலே படம் வெற்றிபெறும். இதில் சிவாஜி பிறந்தநாளான அக்-1 முதல் என்று விளம்பர போஸ்டர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாவது உறுதி. மக்கள்தலைவர் சிவாஜி நல்ஆசியுடன் இளையதளபதி விஜயின் புலி வெற்றி பெறவும்,  நடிகர்திலகம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டும் அரசுக்கு நன்றி தெரிவித்து படவெளியீட்டு போஸ்டர் அடித்த தயாரிப்பாளருக்கும் சிவாஜிகணேசன்.இன் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
 
சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் அதன் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் 21.07.2015 மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளன்று நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அரசே மணிமண்டபம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற வெற்றி உண்ணாவிரதத்தின் போது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கலையுலகைச் சார்ந்தவர்கள் ஆற்றிய உரையின் காணொளி. மேலும் காணொளியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
14.09.2015 திங்கள் கிழமை சென்னை கடற்கரைசாலையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் திருவுருவச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட ஜனதாதளத்தின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் திரு.க.ஜான்மோசஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஜனதாதளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி, ராஜேந்திரன், பாக்கியத்தேவர், முருகேசன் ஆகியோரும்  அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் அ.இ.து.தலைவர் திரு.கா.சுந்தராஜன் மற்றும் வாட்சு நாகராஜ்,  மதுரை மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவை மாவட்டத்தலைவர் திரு.சிவாஜி செல்வம், பச்சைமணி, பாண்டி, பத்மநாபன், ஜவகர், மற்றும் சமூகநலப் பேரவையைச் சேர்ந்த ஏராளமானோர், அரசமரம் செவாலியே குரூப்ஸை சேர்ந்த குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, அன்றே நம் தலைவர் இன்றைய அரசியல் பற்றி பாடலிலும் வசனத்திலும் சொல்லி விட்டார். ஒருவேளை தாம் தமிழகத்தில் பிறந்ததினால் தனக்கு இப்படி நிலை ஏற்படும் என்று அவருக்கு அப்பொழுதே தெரியும் போல தோன்றுகிறது.
தமிழுக்கே தமிழ் பேசக் கற்றுக் கொடுத்த ஒரே தமிழன் சிவாஜி.
இந்த நன்றி கெட்ட உலகத்தைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் அன்றே நம் தலைவர் சொல்லி விட்டார். 
சென்னை கடற்கரைசாலையில் உள்ள மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறதா-இல்லையா என்பதைப் பற்றி புதியதலைமுறை தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் போது மக்களிடம் ஒட்டெடுப்பு நடத்தி வெளியிடப்பட்ட மக்கள் கருத்து.
நமது மக்கள்தலைவரின் அதிதீவிர அபிமானி கவிஞர் திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா அவர்கள் தலைவர் சிவாஜி அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றிய முழு விபரங்களையும் தொகுத்து எழுதி விரைவில் வெளிவர இருக்கும்  சிவாஜி ஆக்கமும் அர்ப்பணிப்பும் என்ற புத்தகத்தின் முன் அட்டை மற்றும் பின் அட்டை உங்கள் பார்வைக்கு

 
  • அன்புள்ள மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே, நமது அன்பு தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பாட திரு.ராகவேந்திரா(நடிகர்திலகம்.காம்), சகோதரி கிரிஜா(நடிகர்திலகம் சிவாஜி.காம், திரு.நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா (தலைவன் சிவாஜி.காம்). திரு.சந்திரசேகரன்(சிவாஜி பேரவை.காம்) இவர்களின்வழியில் சிவாஜிகணேசன்.இன் என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கபட்டுள்ளது.
  • இந்த வலைதளத்தில் மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் அனைத்து செய்திகளும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பதிவிடப்படும். எந்த அமைப்பினராக இருந்தாலும் தங்கள் பகுதியில் நடைபெறும் தலைவர் சிவாஜி அவர்களின் விழா, தலைவரின் அன்பு இதயங்களின் பிறந்தநாள் மற்றும் இல்ல விழா எந்த நிகழ்ச்சியானாலும் அதன் புகைப்படத்தை info@sivajiganesan.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • உலகமெங்கும் உள்ளவர்கள் தாங்கள் நடத்தும் மக்கள் தலைவரின் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.


அன்புடன்
www.sivajiganesan.in